Wednesday, August 7, 2013

இரை கொத்தி இறக்கும் மீன் குஞ்சு




உள் அறையில் தாழிடப்பட்ட இரக்கம்
சாவி துளை வழி தேடுகிறது
பிரிவின் வேதனைக்குள் உருக்கி ஊற்றப்பட்ட உன்னை

குருவீச்சம் பூ நிறைந்த
மன வெளிக்குள்
அத்து மீறி நுழைகிறது
உன் காற்று
இறுதி வசந்தங்களையும் உதிர்த்திவிட

அடையாளம் அறியா உன் பசியில்
நான் அணு அணுவாக அருந்தப்பட்டேன்
காலியான மாம்ச குவனளையில் நிரம்ி வழிகிறது
உன் கோபத்தின் உச்சம்

பறந்து திரிய ஆசைதான்
உன் மன வெளியில் ஊர் குருவி என
கன்னி குத்தி வைத்திருக்கிறாய்
இரை தேட இறங்குவேன் என்று உன் பாழ் நிலங்களில்

காதலாகி கசிந்து உருகி
உன் விரல்களுக்குள் அகப்பட்ட
கைப் பாவை ஆனேன்
உருட்டி விளையாடு
உடைத்து விடாதே

இரை கொத்தி இறக்கும் மீன் குஞ்சாய்
இறக்க வேண்டியே
வருகிறேன் உன் வழியில்..


-ஸமான்

No comments:

Post a Comment