Saturday, August 31, 2013

காலி கோக் ரின்கள்-



அருந்தி முடித்த காலி கோக் ரின்களை
நசித்து எறிவதும்
மிச்சம் மீதி துளிகளில்
காற்று சிலிர்ப்பதும்
வேண்டும் என்றே கால்களால் அதை உதைத்து கொண்டு
தெருவில் நடப்பதும்
விருப்பமுடையதாய் இருக்கிறது

கோக் ரின் காற்றில் எழும்பி
விர்ர்ர்ர் என்று பறந்து
தெருவில் டங்ங்ங்ங் என்று வீழும் போது

திரும்பி பார்க்கும் மனிதர்களும்
வெருண்டோடும் நாய்களும்
கும் என்று பறக்கும்
பறவைகளும்
இரவை தன் வெறுமைக்குள்
நிரப்பிக் கொள்வதும் என
இந் நிகழ்வுகள் நகரத்தின் சாலைகளில்
சர்வ சாதாரணமானவை

வெறிச்சோடிய தெருவில்
இரவை தன் வெறுமைக்குள்
நிரப்பிக் கொள்ளும்
காலி கோக் ரின்கள் என் கனவிலும்
உருள்கின்றன

இரவில் வீழும் விர்ர்ர்ர் டங்ங்ங்ங் சப்தங்கள்
ஆழ் கடலின் அமைதியில் கவிந்து அழிகின்றன

-ஜெம்சித் ஸமான்

Tuesday, August 27, 2013

் கண்களுக்குள்ளிருந்து குதித்தது கடல

ஈனச் சொல் ஒன்றை
உதட்டிலிருந்து களற்றி எறிந்துவிட்டு
இரவுக்குள் புகுந்து
மறைந்துவிட்டான்
அந்த ஈனச் சொல்
தன் விஷப் பற்களால்
பூமியை கொத்திய போது
சுருண்டு கிடந்த சோம்பேறிக் கடல்
கண்களுக்குள்ளிருந்து குதித்தது

-Zaman

இழந்து போன காடு-


காடு மழையை
தொலைத்திருந்தது
கதவை திறந்து
வெளியே வந்தது நீல மேகம்
அதற்குள்
வரட்சியின்
இரண்டு கண்களைக் கண்டேன்
நேற்று வாசித்த நாவலில்
இதே அத்துவானக் காட்டில்
துள்ளி விளையாடிய
இரண்டு மான் குட்டிகளும்
கண்கள் இன்றி
இறந்து கிடந்தன
உறு புலியின் தீராப் பசி
மான்களின் கண்களாகி
பார்த்து பார்த்து அழுதது
இழந்து போன காட்டை

-ஸமான்

வாழ்வு
நிலம் வளர்ந்து
மலைகள் அழுதது
அசைவிழந்த ஓவியத்தில்
பின் ஒரு இரவில்
அதன புன்னகைத்துக் கொண்டிருந்தது
ஒவ்வொரு நொடி இழப்பிலும்
ஒவ்வொரு புது வாழ்க்கை என்பது
மலைகளுக்குப்
புதிதில்லைதானே

-ஸமான்

Monday, August 26, 2013

சிறகு முளைத்த சூரியன்-


நான் ஒரு சூரியனை வரைந்து கண்ணாடியிடம் காட்டிய போது கைகளை திருகி பறித்துக் கொண்டது எவ்வளவு கேட்டுப் பார்த்தும் அது தரவேயில்லை சிவப்பு நிற சூரியனை காண நேரும் போதெல்லாம் பழைய ஞாபகத்தில் மழை பெய்து ஆறுகள் பெருக்கெடுத்து கண்களுக்குள் ஓடுவதாக பொய் காரணம் கூறி கண்ணாடிக்குள்தான் எங்கோ ஒழித்து வைத்திருக்கிறது நாளை அந்த சூரியனை காட்சிப் படுத்த வேண்டும் ஆசை மிகுதியால் கண்ணாடியை உடைத்து விட்டு சிதறிக்கிடந்த எத்தனையோ 'நான்'களுக்குள்ளிருந்து சூரியனை எடுத்த போது சூரியனுக்கு இரண்டு இறகுகள் முளைத்திருந்தன -ஜெம்சித் ஸமான்

பூமி கடலானது ..............................


பூக்களின் இதழ் மீது
காதல் வற்றிய விழி குளத்திலிருந்து
தவிப்பு மிகுந்த விரல்களால்
அள்ளிக் கொண்டு வந்த
ஒரு சுறங்கைக் கண்ணீர்
விழுந்து கிடந்தது
காற்று துடைப்பத்தோடு பூக்களை
பெருக்க வந்த போது
கண்ணீர் சிதறி பூமியில் விழுந்து
பூமி கடலானது
பிரிவை சுமந்த
சிறு சிறு மீன்கள் மாத்திரம்
முட்கள் குத்தி காம்பு பெயர்ந்து
கடலில் விழுந்து துடித்தது பூவாக
பூ விழுந்த போது
சுவர்கள் அதிர்ந்தன
வெடிப்பெடுத்த சுவரின்
நுண் துளைக்குள்ளிருந்து
பறந்து செல்கிறது
சிறு சிறு மயிர் துளைக்குள்ளால் கசியும்
இரக்கமென்ற வண்ணத்திகள்
-ஜெம்சித் ஸமான்

Saturday, August 24, 2013

கடலும், தீவுகளும்-



அலைகள் இல்லாத
ஒரு கடலை உருவாக்கினேன்
ஆழ் கடலில் மட்டும்தான்
அலைகளின் ஆக்ரோஷம் இருந்தது
இந்தக் கடலைப் பற்றி
நீங்கள் தெரிந்து கொள்ளும் போது
நான்கு பக்கங்களும்
மலைகளால் சூழப்பட்ட
அழகான தீவை
நான் உருவாக்கிக் கொண்டிருப்பேன்

-ஜெம்சித் ஸமான்

Thursday, August 22, 2013

ஞாபகப் பல்லிகள்-


சுவரில் ஊர்ந்து சென்ற ஞாபகப் பல்லியின் . கால் தடங்களை தேடி ஒரு . ஒரு ஆறாத் தவிப்போடு . சுவர் வழியே ஏறத் தொடங்கினேன் . சறுக்கி சறுக்கி மூட்டை மூட்டையாய் விழுந்தன. பெருஞ் சுமைகள் . நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன் . ஏழு கடல்களை குடித்து . ஓராயிரம் மலைகளையும் விழுங்கி . பேரலையை விடப் பெரிதாய் . அந்த ஞாபகப் பல்லிகள் . என்னை நோக்கி வரும் போது . அலைகளும் முற்றுகை இட முடியாத .ஆழ் கடலின் அமைதியில் ஒழிந்து கொள்ளலாமென்று . ஓடி வரும் போது . குதித்துப் பாய்ந்த பல்லி . என் மனச் சுவரில் ஒட்டிக் கொண்டது . அந்த ஞாபகத்தை பிடித்து . கொன்று விடலாம் என்று . என் மனச் சுவரில் ஏறத் தொடங்கினேன் . எனக்குள்ளிருந்த குப்பைகளுக்குள்ளும் . கூளங்களுக்குள்ளும் . அது ஒட்டி ஒட்டி ஊர்ந்து . அரவமே இல்லாமல் ஒழிந்து கொண்டது . என் இதயத்தை . குப்பைகளாகவும் கூளங்களாகவும் . மலைக் கற்களாகவும் . அழகாக துப்பரவு செய்து விட்டு . சூரியனை சக்கையாயாய் பிழிந்து . வெளிச்சத்தை தளும்பி வழியும் மட்டும் . இதயக் குவளையில் ஊற்றுகிறேன்.அங்குதான் புன்னகை என்னும் . பெரும் பாம்புகள் துயரப் பல்லியை . விழுங்கிக் கொண்டிருந்தது . பல்லியை விழுங்கி முடித்த கையோடு . பாம்பு என் உதடுகளில் சுருண்டு கொண்டது . எனக்குள்ளிருந்து புன்னகையை . கைப் பற்றிக் கொண்டு வெளியே வருகிறேன் . எனக்காக கண்ணீரை உற்பத்தி செய்து கொண்டிருந்தவர்கள் . இன்னுமொரு என்னை . தேடிக் கொண்டிருந்தார்கள் . ஒரு புன்னகையை எப்படியெல்லாம் . காப்பாத்த வேண்டி இருக்கிறது

-ஜெம்சித் ஸமான்

-ஞாபகப் பல்லிகள்



சுவரில் ஊர்ந்து சென்ற ஞாபகப் பல்லியின் . கால் தடங்களை தேடி ஒரு . ஒரு ஆறாத் தவிப்போடு . சுவர் வழியே ஏறத் தொடங்கினேன் . சறுக்கி சறுக்கி மூட்டை மூட்டையாய் . பெருஞ் சுமைகள் . நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன் . ஏழு கடல்களை குடித்து . ஓராயிரம் மலைகளையும் விழுங்கி . பேரலையை விடப் பெரிதாய் . அந்த ஞாபகப் பல்லிகள் . என்னை நோக்கி வரும் போது . அலைகளும் முற்றுகை இட முடியாத . ஒழிந்து கொள்ளலாமென்று . ஓடி வரும் போது . குதித்துப் பாய்ந்த பல்லி . என் மனச் சுவரில் ஒட்டிக் கொண்டது . அந்த ஞாபகத்தை பிடித்து . கொன்று விடலாம் என்று . என் மனச் சுவரில் ஏறத் தொடங்கினேன் . எனக்குள்ளிருந்த குப்பைகளுக்குள்ளும் . கூளங்களுக்குள்ளும் . அது ஒட்டி ஒட்டி ஊர்ந்து . அரவமே இல்லாமல் ஒழிந்து கொண்டது . என் இதயத்தை . குப்பைகளாகவும் கூளங்களாகவும் . மலைக் கற்களாகவும் . அழகாக துப்பரவு செய்து விட்டு . சூரியனை சக்கையாயாய் பிழிந்து . வெளிச்சத்தை தளும்பி வழியும் மட்டும் . இதயக் குவளையில் ஊற்றுகிறேன்.அங்குதான் புன்னகை என்னும் . பெரும் பாம்புகள் துயரப் பல்லியை . விழுங்கிக் கொண்டிருந்தது . பல்லியை விழுங்கி முடித்த கையோடு . பாம்பு என் உதடுகளில் சுருண்டு கொண்டது . எனக்குள்ளிருந்து புன்னகையை . கைப் பற்றிக் கொண்டு வெளியே வருகிறேன் . எனக்காக கண்ணீரை உற்பத்தி செய்து கொண்டிருந்தவர்கள் . இன்னுமொரு என்னை . தேடிக் கொண்டிருந்தார்கள் . ஒரு புன்னகையை எப்படியெல்லாம் . காப்பாத்த வேண்டி இருக்கிறது

-ஜெம்சித் ஸமான்

Thursday, August 15, 2013

கோழி விழுங்கிய உலகு-


அரிசி புடைப்பது என்பது
மருவி வரும் கிராமிய கலைகளைப் போல
எங்கள் உம்மாக்களுக்கு மட்டுமே
அது இப்போது தெரியும்

வம்மிப் பழம் பூசி மெழுகிய
பிரம்பு சுளகிற்குள் அரிசை நிரப்பி
அதை லாவகமாக உதறி
சுளகின் முதுகில் உம்மா விரலால் தட்டுவா
அப்போது என் வீட்டு முற்றத்தில்
நெற்லும் புளகும் தனியாக விழும்
அதை பொறுக்கி உண்ண கோழிகளுக்குள்
பலத்த போட்டி நிலவும்

உம்மா ஒரு பழங் கதை சொன்னா
சிறு பிள்ளையாய் இருந்த போது
பக்கத்து பணக்காரர்கள் வீட்டுக்கு
மூத்தம்மாவோது தவுடு கொழிக்க
செல்வாராம்
குறு நெல்லரிசி சோறும்
கிட்டங்கி செப்பலி மீன்
குளம்பும் தின்ன
ஊர் ஏழைகளோடு போட்டி போட்டு
தவுடு கொழிச்சால்தான்
ஒரு குடும்பம் பசியாற
குரு நெல் சேர்க்க முடியுமாம்

உம்மா இன்னுமொரு கதையும் சொல்லுவா
கோழிகளுக்கு எதை தின்றாலும்
பசி தீராதாம்
இரவுகளில் உருண்டையான
கூளாங் கற்களை விழுங்கிவிட்டுத்தான்
உறங்கச் செல்லுமாம்

அப்போதெல்லாம் நினைத்ததுண்டு கோழிகள்
உருண்டையா பூமியைதான்
விழுங்கி கொள்கிறதா என்றுகோழிகளை போலதான்
நாகரீகமும் சில அழகான
கிராமிய பண்பாடுகளை
தின்று தின்று மலம் கழித்துவிட்டது

மூன்று கல் அடுப்பு
களி மண் அடுப்பு
மண் பானை குளிர்ந்த நீர் பற்றியெல்லாம்
நாங்கள் பள்ளிகளில் படித்தது போல
உமி
தவுடு
குளத்து மீன்கள்
சுளகு
கறு நெல் பற்றியெல்லாம்
பள்ளிகளில் மட்டும்தான்
படிக்க முடியும்

உம்மா எப்போதும் அரிசி புடைக்கும்
முற்றத்தை பார்க்கிறேன்
உம்மா அரிசி புடைக்க வருவதுமில்லை
கோழிகள் தீன் தின்ன
வருவதுமில்லை
கோழிகள் உலகை மட்டும்தான்
விழுங்கிக் கொள்கின்றன

கோழிகள் விழுங்கும் உலகில்தான்
நாமெல்லாம் வாழ்ந்து வருகின்றோம்

கோழிகளும் இப்போது
நாகரீக குப்பைகளை மட்டும்தான்
'சீய்க்கின்றன'

-ஜெம்சித் ஸமான்

என் அறை -



என் அறைக்குள்
வர நினைக்கிறீர்களா
சிறிது நேரம் தாமதியுங்கள்

என் அறைக்குள் வருவதற்கு முன்
தனிமைப் புத்தகத்தை
ஒரு முறை எனினும்
நீங்கள் வாசித்திருக்க வேண்டும்

ஒரு தேநீர் குவளையோடு
யன்னல் மழைய ரசித்து
அருந்த தெரிந்திருக்க வேண்டும்
ஒற்றை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்
நடமாட தெரிந்திருக்க வேண்டும்

புழுதி வாசத்தை
வெளியேறி செல்லும் வரை
சுவாசிக்க தயாராக
இருக்க வேண்டும்

ஒரு கதிரை
ஒரு மேசை

வெள்ளை நிறத்தில்
ஒரு பூ கிண்ணம்
இரண்டொரு கவிதை தாள்கள்
நான் எழுதும் பேனா
நான் எழுதிக் கொண்டே இருப்பேன்
நீங்கள் தரையில்தான்
அமர்ந்திருக்க வேண்டும்
என் ஆடைகளில் உள்ள கிழிசல்கள் பற்றியும்
என் அறைச் சுவரிலுள்ள
அழுக்குகள் பற்றியும்
வேறு எங்குமே பேசக் கூடாது

கவிதை தாள்களோடுதான்
நான் பேசிக் கொண்டிருப்பேன்
என் அறையிலிருந்து
ஒர வரட்சியான புன்னகையை
மட்டும்தான் நீங்கள்
எடுத்து செல்ல முடியும்
நிசப்தம் கலைப்பதற்கு
சிறு குழந்தைகள் இங்கு இல்லை

அறை சுவரில்
கொளுவப்பட்டிருக்கும்
என் சிறு வயது புகைப்படத்தில்
இருக்கும் புன்னகையை
என் உதடுகளில்
இப்போது நீங்கள் தேடக் கூடாது

உங்களை வரவேற்க
நானும்
என் வாசல் பூக் கன்றுகளும்
என் தாயின் அன்பான புன்னகையும்தான் உண்டு

வருவதென்றால் இப்போது வாருங்கள்
என் அறைக்குள்
தாழ்ப்பாளில்லாத என் வீட்டு
வாசல் கதவு
திறந்தே இருக்கும்

-ஜெம்சித் ஸமான்

கொடுக்கு நீர்



செத்த அகாலம்
அழுக்கு போர்வை உள் வியர்க்கும்
நிர்வான இரவு
ஈரமூறிய சிவப்பு விளக்கின்
மெல் ஒளியில் நிழல் தின்று நீர் விழுந்து நெளிகிறது நச்சு பாம்புகள் யோனி உள்

போதி மரங்கள் சரிந்து
மண் கெளவின
குறி விறைத்த குதிரையின் பசி தீர்ந்து
பிணி வந்து அழுந்தி செத்தன

போதி மர உளுத்த கிளை ஒன்றில்
குந்தி அமர்ந்து சீலை அவிழ்க்கிறாள்
விலை மாது ஒருத்தி

புழுத்த அவள் யோனி உள் கொம்பு உயர்த்தின கருந் தேள்கள்
காளான்கள் உள் நசுங்கி நாறின
ஆண் உறைக்குள் குழந்தைகள் வளர்ந்தன
யோனி தின்ற எறும்பின் பச்சையம் கருகி
பிணியோடு வாழ்கிறது நிலா..
வெள்ளி பிஞ்சுகளில்
நோய் குறி கண்டு செத்தன
முது மரமும் முளை செடிகளும்..!!

( இக் கலவியில வழியும் சொட்டு ஈரமும்
விஷ தேள்களின் கொடுக்கு நீர்தான்)

-jamsith zaman

தாய் பால்-



இன்று எனக்கு
அருந்தக் கிடைத்தது
ஒரு கோப்பை
கசந்த தேநீர்தான்

தாய் ஊரில் இல்லாத போது
அருந்துகின்ற
தேநீர் கூட
கசப்பாய்தான் இருக்கிறது

உம்மா
எனககு நீ ஊட்டாத
தாய்ப்பாலின் சுவை
எப்படி இருக்கும் உம்மா..?

குழந்தையாய்
உன் மடி மீது கிடந்து
நான் அழுத போதெல்லாம்
நீ ஊட்டிய
புட்டிப்பால் கூட இப்படித்தான்
கசப்பாய் இருந்தது உம்மா

-ஸமான்


*நான் பிறந்த போது என் தாயின் மார்பில்
பால் சுரப்பு இருக்கவில்லையாம்

உன் இரு விழிகள்-



கூர்ந்து பார்க்கிறேன்

கடல் வெளியில்
தாழப்பறக்கும்
கரும் பஞ்சுரோம குருவிகளின்
ஏக்கம் தழும்பும் விழிகளை

வரிக் குதிரைகளின் குழம்படியில்
முளைத்து கிடக்கும் வெள்ளிகளை

பெருங்கடலின் ஈர மேனியில்
கீலம் கீலமாய் சிதறிக் கிடக்கும்
நிலா வெளிச்சங்களை

கீறிக்கொண்டே இருக்கிறாய்
தாழிட்டு அடைக்கப்பட்ட
அழுக்கு காவியேறிய கூதல் கண்ணாடியில்
பெளர்ணமியை மறந்து
இருளில் மூழ்கிய
இவ் ஆற்றைப் பற்றி

நான் அழைக்கிறேன்
புதை குழிக்குள் உதிர்ந்து
கிடக்கும்
சருகுகளை மிதித்துக் கொண்டே
நடக்கிறாய் நீ

எரி நட்சத்திரங்கள்
குதித்து விழும் பாழ் நிலங்களில்
என்னுடைய கறுத்த நிழலை
உன்னுடனே அழைத்து போகிறாய் நீ

அழிந்து போன பழ
தோட்டங்களை அழகுபடுத்திக் கொண்டே
இருக்கிறாய் நீ

ஒவ்வொரு அறைகளையும்
கடந்து வருகிறேன்
இரண்டாவது சித்திரக் கூடத்தில்
விரல் இடுக்குகளில்
முகம் புதைத்திருக்கும்
நவீன ஓவியம் ஒன்றில்
துயரோடு அழுது கொண்டிருக்கிறது
உன் இரு விழிகள்

-ஜெம்சித் ஸமான்

90களின் பின் அந்தி -



ஒரு ஊசாட்டமும் இல்லை
என் செம் மண் தெருவை
தார் ஊற்றி கொன்றது யார்

90களின் பின் அந்தியா இது

அப்போது காகங்கள் என்றாலும்
தெருவை கலைத்துக் கொண்டிருக்கும்
ராணுவ வீரர்களின் சூ கால்கள்
தெருவின் விரை மீது
ஊன்றி ஊன்றி மிதிக்கும்

ஜீப் வண்டிகளின்
டயர் தடங்களில் நசுங்கிய
கைப் பாவைகளைக் கேட்டு
எந்தக் குழந்தை என்றாலும்
அழுது வடிந்து கொண்டிருக்கும்

முரட்டு துப்பாக்கிகளைக் கண்டு
தெரு நாய்கள் குரைத்து குரைத்து
அச்சம் எழுப்பி
தெருவெல்லாம் கதறி ஓடும்

90-91 களின் அதிகாலை வெண் பனிக்குள்
உடல் கொடுகி விழி நிமிர்ந்து
கைகள் கெஞ்ச ஒவ்வொரு மின் கம்பங்களுக்கும்
உரமாக விதைக்கப்பட்டவர்களின்
குருதி சொட்டிய பரள் மண் துகள்கள்
எங்கள் உம்மாக்களின் கண்களுக்குள்ளும்
விழுந்து கரிக்கும்

ஒரு ஊசாட்டமும் இல்லை
கைகளும் கண்களும்
கறுப்பு துணியால் கட்டபபட்டு
சும்மா கிடந்தது தெரு
மார்பில் இரும்பு துப்பாக்கிகள்
அழுந்தியிருக்கவில்லை

'நீல' வானத்தில் பறவைகளின்
சஞ்சாரம் அறவே இல்லை பின் அந்தி 6.00 மணிக்கு
எங்கள் விளையாட்டு திடல்களில்
யுத்த விதை விழுந்து மண் பிளந்து
வேர் கொண்டு எழுந்த நாட்களில்
ஒன்றா இது

1999ல் பயத்தோடு விளையாடி கழித்த
முன் இரா ஒன்றில்
'ஜஃபர் மச்சான்' இனம் தெரியாத
இரண்டு பேரால் சுட்டு கொல்லப்பட்டார்

அவர் மெளத்தாகி கிடந்த
மஞ்சோண்ணா மர நிழல் மட்டும்தான்
அவர் மரணத்திற்கு சாட்சியாய்
இருந்தது

பின் அதையும் கதற கதற
சுட்டு கொன்றுவிட்டார்கள்

-ஜெம்சித் ஸமான்

இந்தச் சம்பவம் நடக்கும் போது எனக்கு 9 வயது மஃரிப் தொழுகைக்காக அதான் ஒலிக்க ஆரம்பித்த போது நாங்கள் எங்கள் வீட்டுக்கு சற்று தள்ளியிருக்கும் தெருவோர பாள் வளவில் கிரிக்கட் விளையாடிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தோம் பிரதான வீதியை கடப்பதற்குள் இரண்டு துப்பாக்கி வெடி சப்தங்கள் கேட்டது அச்சத்தோடு திரும்பிப் பார்க்கிறேன் ஜஃபர் மச்சான் பின் மண்டையில் கைகளை கட்டிக் கொண்டு தரையில் சாய்ந்து கொண்டிருந்தார் எப்போதும் அவர் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் தெருவோர மஞ்சோண்ணா மர நிழலிலேயே அவருடைய மரணமும் ரத்தத்தால் எழுதப்பட்டது சுட்டவர்கள் இரண்டு பேரும் இருபத்து மூன்று வயதிற்கும் குள்ளமாக இருந்தார்கள் முகம் ஞாபகத்தில் இல்லை சரம் உடுத்திருந்தார்கள் ஏ கே 47 துப்பாக்கியை அந்த சரத்தினுள்தான் மறைத்துக் கொண்டார்கள் இத்தனைக்கும் அவர்கள் இரண்டு பேரும் அதிக நேரமாய் அவருடன்தான் பேசிக் கொண்டும் வழக்கமாய் தெரு ஓர கட்டில் இளந்தாரிகள் மாபிள் விளையாடும் இடத்தில் மச்சானுடன்விளையாடிக் கொண்டும்தான் இருந்தார்கள் மச்சானை சுட்டுவிட்டு அவர்கள் இரண்டு பேரும் புஷ் பைக்கில்தான் இதே தெருவில் சென்று அடிச்சாண்ட வட்டை கட்டால் வேகமாக சென்று மறைந்தார்கள் ஊர் மக்கள் அவர்கள் சென்று சேரும் வரை அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள் 90.களின் மறாத பின் அந்ததி அது

அக்காக்கள் இல்லாத வீடுகள் அழகாய் இருப்பதில்லை-


அக்கா தரும் தேநீரும்
அம்மா தரும் தேநீரும்
ஒன்று போலவே இருக்கும் என்று
என் சிநேகிதன் அடிக்கடி சொல்வான்
உண்மைதான்
அம்மாக்கள் இல்லாத வீடுகளைப் போல
அக்காக்கள் இல்லாத வீடுகளும்
அழகாய் இருப்பதில்லை

அக்காக்கள் எல்லோரும்
அன்பானவர்களாகவே இருக்கிறார்கள்

அக்காக்கள் இருக்கும் தம்பிகள்
ரகசியங்களை வேறு யாருடனும்
பகிர்ந்து கொள்வதில்லை

தம்பிகளின் முதல் பெண் தோழிகளாக
அக்காக்களே இருக்கிறார்கள்

சிறு வயதில்
அம்மாவின் முந்தானையில்
முகம் துடைத்துக் கொள்ளும்
தம்பிகள் பதின் பருவங்களில்
முகம் துடைக்க
அக்காவின் துப்பட்டாக்களையே
தேடுகின்றார்கள்
அக்காக்களின் மடிகளிலேயே
தலை வைத்து உறங்குகிறார்கள்

அதைத்தான் அக்காக்களும்
விரும்புகின்றார்கள்

அம்மாக்களுக்கு அடுத்ததாய்
தம்பிகளுக்கு கிடைக்கும்
அன்பான உலகம் அக்காக்கள்தான்
அக்காக்களை அம்மாவை போல்
நினைத்துக் கொள்ளும் தம்பிகளுக்கு ஏனோ..?
அம்மாக்களை அக்காக்களாய்
நினைக்க முடிவதில்லை

தம்பிகளுடனான செல்ல சண்டைகளை
அக்காக்கள் விரும்புகின்றார்கள்
தம்பிகள் கோபப்படும் போது
தலை தடவி புன்னகைக்கிறார்கள்

அக்காக்களை தவிர தம்பிகள்
வேறு யாருடனும்
உரிமையோடு சண்டை இடுவதில்லை

கணவனைத் தவிர
அக்கக்கள் அன்போடு முத்தமிடுவது
தம்பிகளை மட்டும்தான்

தம்பிகள் தன் காதலி பற்றி
முதலில் சொல்வது அக்காக்களிடம்தான்

அப்பாக்கள் தம்பிகளை திட்டும் போதல்லாம்
அக்காக்களே பரிந்து பேசுகின்றார்கள்

சாக்லேட்டோ
கொய்யாக் கனிகளோ
பாதி கடித்த பின்
தம்பிளுக்கு என்று பத்திரப்படுத்துவது
அக்காக்கள் மட்டும்தான்

தம்பிகளுக்கு கொடுப்பதற்கென்றே
அக்காக்கள் ரகசியமாக
பணம் சேமிக்கிறார்கள்

அம்மாக்கு வாங்கி தரும் சேலைகளை போலதான்
அக்காக்களுக்கு தம்பிகள் வாங்கித்தரும்
மலிவான சுடிதார்களும்
உயர்வானவைதான்

திரு மணம் முடித்த பின்
அக்காக்கள் கணவனுக்காக
வாழ பழகிக் கொள்கிறார்கள்
அதன் பின் தம்பிகள் மீதான
அன்பை வெளிப்படையாக
காட்ட முடிவதில்லை அவர்களால்

-ஜெம்சித் ஸமான்

மழை பற்றி பேசும் முன்ப


என் விழிகளை
ஒரு முறை
துடைத்துக் கொள்கிறேன்
மழையை அதிகமாக ரசிப்பதனால்
அது என் கண்களுக்குள்ளேயே இருக்கிறது
ஒரு காதலியை போல

-ஸமான்

வலசைப் பறவைகள்

90களின் பின் அந்தி -

கம்பி ரேழிகள்

சிநேகிதனின் வீடு

ஒரு கோப்பை தேநீர்

இரவு நேர பயணி

- நானும் அதுவும்

பிணம் செய்ய தெரியாத தேசம்

கொடுக்கு நீர்

புன்னகை மீதித்திருந்த இரா-

பெரு நகர்வொன்று--

இருண்மை ஓவியம்-

செசானின் தரை காட்சி-

கசப்பு ஊறிய கோப்பைகள்

கல் எறிந்த குளம்-

கல் எறிந்த குளம்-


கல் எறிந்த குளத்தில்
சிறு சலனம் கூட இல்லை
சிந்திக்க ஆரம்பிக்கிறேன்
இவை கற்களா
இது குளம்தானா
இது கனவா
இல்லை இடது பக்கமாக
துணிகளுக்குள் மறைந்து துடிக்கும்
கருங் கற்களை போல
உயிர்ப்பில்லாதவையா

எந்த வித அசைவுகளும் இல்லாமல்
என் நிழலை குவளையில் ஏந்திய படி
விரிகிறது வெய்யில் ஊறிய பாதை

சில சொற்கள் சுடு கோப்பையில் தளும்பின
சில சொற்கள் சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்தன

நடை வண்டியில் நடை பழக்கிய தாயை
விரல் பிடித்து மிகவும் எச்சரிக்கையோடு
முதியோர் இல்லத்திற்கு அழைத்து செல்லும்
ஒருவனிடத்தில் கவிந்து கிடக்கும்
மெளனத்தைப் போல
எந்த சொற்களிலுமே
அர்த்தம் இருந்ததில்லை

புன்னகைப்பதற்கே ஐயுறுகிறேன்
ஒரு சிறு புன்னகையின் முடிவிடத்தில்
ஒரு சோகத்திற்கான கதவு
திறக்கப்படலாம்


-ஸமான்

தெருவை கடக்கும் மழை-

தெருவை கடக்கும் மழை-


சிறு மழை
கை பிடி வரிசைகளை போல நீளமாயும்
குறுக்கலாயும் பாதைகள்
பெயர்வின் பின் விரிந்து கிடக்கும்
வெறுமை காவிய பெரு நிலங்களில்
இப்போதும் எவரையோ
தேடிக்கொண்டிருக்கிறது
நிலா

துயர் கவிந்து சுருள்கிறது
என் தெருக்கள்

ஒரு வெள்ளை புறா மின் கம்பத்தில்
யார் வருகைக்காகவோ காத்திருக்கிறது

தெருவில் உதிர்ந்து கிடக்கும்
பூக்களிலும் சருகுகளிலும்
மீதித்திருக்கிறது
நேற்றின் விழிகளில் சொட்டிய
ஒரு சுறங்கை ஈரம்

பூனை உறங்கும் அடுப்பங் கரையில்
பசித்திருக்கிறாள் ஒருத்தி

தெருவில் கடந்து செல்லும்
ஆடை வியாபாரியை கடந்து செல்கிறாள்
கிழிசல் ஆடை உடுத்திய வேறு ஒருத்தி

பொம்மை வியாபாரியின் கால் தடங்களில்
மசிந்து கொண்டே இருக்கிறது
ஒரு சிறுமியின் ஏக்கம் காவிய விழிகள்

எல்லோரையும் நனைத்தபடி
தெருவை கடக்கிறது
ஒரு சிறு மழை

-ஸமான்

வீடு பற்றிய சில குறிப்புகள்-

அவள் என்ற ஓவியம்-

துவேச நதி-

அவர்கள் துரத்த வேண்டிய வண்ணத்திகள்-

கதவை திறக்கும் முன்

உம்மாவும் ஒரு நிலாக் காலமும்-

அமாவாசை இரவ

ஒரு சொட்டும் தீராத போர் கோப்பைகள்-

உன் வறள் நிலங்களில் துடிக்கும் என் வளர்ப்பு மீன் குஞ்சுகள்-

மௌன வலிகள்-

ிறகுகள

உம்மாவும் ஒரு மழைக் காலமும்-

மழைக் குழந்தைகள்----------------------


மழை
குழந்தைகளை நனைக்கும் போதெல்லாம்
மழலையாகிவிடுகின்றது
பிஞ்சு விரல்களால்
'கிள்ளி நொள்ளி பிராண்டி'
விளையாடுகின்றது
முதல் மண் வாசம் கமழும்
மணல் நிரம்ப
'அ ஆ' எழுதுகின்றது

மழைச் சேற்றை
முகம் நிரம்ப அள்ளிப் பூசி
மழையோடு சிரிக்கிறாள்
அந்தச் சிறுமி
மழை விரல்களை தழுவி
ஆசையாய் முத்தம் கொடுக்கிறாள்

மழை
அநாதை குழந்தைக்கு
அம்மாவாகிறது
முந்தானையால் முகம் துடைக்கிறது

இந்தச் சிறுமி
எப்போதாவது வரும்
மழை அம்மாவின் கைகளால்தான்
திருப்தியாக தீத்து சோறு உண்கிறாள்

மழை அம்மா எப்போதாவது கொண்டு வரும்
கைப் பாவையோடுதான் ஆசையாய்
விளையாடிக் கொள்கிறாள்

அநாதை குழந்தைகளுக்கு
எத்தனையோ அன்பான
அம்மாக்கள் கிடைப்பதைப் போல
மழைக்கும் இருக்கிறது
எத்தனையோ அன்பான குழந்தைகள்

-ஜெம்சித் ஸமான்

எனக்கு ஒரு பைத்தியகார அக்காவை தெரியும்-

முதல் நேர் முக தேர்வு-

நிலா

ஆப்பிள்

ஆப்பிள் கனி ஒன்றை
புசித்து கொண்டிருந்தேன்
நறுக்கிய துண்டுகள்
ஒவ்வொன்றிலும்
அவமானத்தால் கூனி குறுகி
நின்று கொண்டிருந்தார்கள்
ஆதாமும் ஏவாளும்

அக்காக்கள் இல்லாத வீடுகள் அழகாய் இருப்பதில்லை-


அக்கா தரும் தேநீரும்
அம்மா தரும் தேநீரும்
ஒன்று போலவே இருக்கும் என்று
என் சிநேகிதன் அடிக்கடி சொல்வான்
உண்மைதான்
அம்மாக்கள் இல்லாத வீடுகளைப் போல
அக்காக்கள் இல்லாத வீடுகளும்
அழகாய் இருப்பதில்லை

அக்காக்கள் எல்லோரும்
அன்பானவர்களாகவே இருக்கிறார்கள்

அக்காக்கள் இருக்கும் தம்பிகள்
ரகசியங்களை வேறு யாருடனும்
பகிர்ந்து கொள்வதில்லை

தம்பிகளின் முதல் பெண் தோழிகளாக
அக்காக்களே இருக்கிறார்கள்

சிறு வயதில்
அம்மாவின் முந்தானையில்
முகம் துடைத்துக் கொள்ளும்
தம்பிகள் பதின் பருவங்களில்
முகம் துடைக்க
அக்காவின் துப்பட்டாக்களையே
தேடுகின்றார்கள்
அக்காக்களின் மடிகளிலேயே
தலை வைத்து உறங்குகிறார்கள்

அதைத்தான் அக்காக்களும்
விரும்புகின்றார்கள்

அம்மாக்களுக்கு அடுத்ததாய்
தம்பிகளுக்கு கிடைக்கும்
அன்பான உலகம் அக்காக்கள்தான்
அக்காக்களை அம்மாவை போல்
நினைத்துக் கொள்ளும் தம்பிகளுக்கு ஏனோ..?
அம்மாக்களை அக்காக்களாய்
நினைக்க முடிவதில்லை

தம்பிகளுடனான செல்ல சண்டைகளை
அக்காக்கள் விரும்புகின்றார்கள்
தம்பிகள் கோபப்படும் போது
தலை தடவி புன்னகைக்கிறார்கள்

அக்காக்களை தவிர தம்பிகள்
வேறு யாருடனும்
உரிமையோடு சண்டை இடுவதில்லை

கணவனைத் தவிர
அக்கக்கள் அன்போடு முத்தமிடுவது
தம்பிகளை மட்டும்தான்

தம்பிகள் தன் காதலி பற்றி
முதலில் சொல்வது அக்காக்களிடம்தான்

அப்பாக்கள் தம்பிகளை திட்டும் போதல்லாம்
அக்காக்களே பரிந்து பேசுகின்றார்கள்

சாக்லேட்டோ
கொய்யாக் கனிகளோ
பாதி கடித்த பின்
தம்பிளுக்கு என்று பத்திரப்படுத்துவது
அக்காக்கள் மட்டும்தான்

தம்பிகளுக்கு கொடுப்பதற்கென்றே
அக்காக்கள் ரகசியமாக
பணம் சேமிக்கிறார்கள்

அம்மாக்கு வாங்கி தரும் சேலைகளை போலதான்
அக்காக்களுக்கு தம்பிகள் வாங்கித்தரும்
மலிவான சுடிதார்களும்
உயர்வானவைதான்

திரு மணம் முடித்த பின்
அக்காக்கள் கணவனுக்காக
வாழ பழகிக் கொள்கிறார்கள்
அதன் பின் தம்பிகள் மீதான
அன்பை வெளிப்படையாக
காட்ட முடிவதில்லை அவர்களால்

-ஜெம்சித் ஸமான்

மழை-



வானப் பெண்ணின்
வெள்ளை முலைக் காம்பிலிருந்து
சொட்டு செட்டாய் வழிகிறது
வயல் நிலங்களிலும்
பழத் தோட்டங்களிலும்
எனக்கு ஊட்டப்படாத
தாய்ப் பால்

-ஸமா

Saturday, August 10, 2013

இறக்கை முளைத்த ஒரு கல்லை பார்த்தேன்-

சோதனை முயற்சிக்காய் புது வித கற்பனையில் எழுதப்பட்ட கவிதை உங்களுடைய கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்

இறக்கை முளைத்த
ஒரு கல்லை பார்த்தேன்-


ஒரு கல்லை பார்த்தேன்
அதற்கு இரண்டு அழகான
இறக்கைகள் இருந்தது
கடவுளின் இருப்பை உறுதி செய்ய
அந்த கல்லின் இறகுகளில்
அழகான ஓவியங்கள் மிளிர்ந்தது
அதன் உணர் கொம்புகளால்
என்னை தழுவி ஓ நீ மனிதனா என்றது
என் கண் முன் பறந்து சென்ற அந்தக் கல்
ஒரு அழகான பூவின்
வயிற்றில் விழுந்து
கருவை கலைத்தது
வேதனையால் நிரம்பி பூக்கள்
பனி பனியாக அழுதது
பூக்களில் இருந்து
அந்தக் கல் பறந்தபோது
பார்த்தேன்
கால்கள் நிரம்ப
மஞ்சள் மஞ்சளாய் ஒட்டியிருந்தது
எத்தனையோ கைக் குண்டுகள்
நாளையும் ஒரு யுத்தம் வரலாம்

-ஜெம்சித் ஸமான்

90களின் பின் அந்தி

90களின் பின் அந்தி

இந்தச் சம்பவம் நடக்கும் போது எனக்கு 9 வயது மஃரிப் தொழுகைக்காக அதான் ஒலிக்க ஆரம்பித்த போது நாங்கள் எங்கள் வீட்டுக்கு சற்று தள்ளியிருக்கும் தெருவோர பாள் வளவில் கிரிக்கட் விளையாடிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தோம் பிரதான வீதியை கடப்பதற்குள் இரண்டு துப்பாக்கி வெடி சப்தங்கள் கேட்டது அச்சத்தோடு திரும்பிப் பார்க்கிறேன் ஜஃபர் மச்சான் பின் மண்டையில் கைகளை கட்டிக் கொண்டு தரையில் சாய்ந்து கொண்டிருந்தார் எப்போதும் அவர் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் தெருவோர மஞ்சோண்ணா மர நிழலிலேயே அவருடைய மரணமும் ரத்தத்தால் எழுதப்பட்டது சுட்டவர்கள் இரண்டு பேரும் இருபத்து மூன்று வயதிற்கும் குள்ளமாக இருந்தார்கள் முகம் ஞாபகத்தில் இல்லை சரம் உடுத்திருந்தார்கள் ஏ கே 47 துப்பாக்கியை அந்த சரத்தினுள்தான் மறைத்துக் கொண்டார்கள் இத்தனைக்கும் அவர்கள் இரண்டு பேரும் அதிக நேரமாய் அவருடன்தான் பேசிக் கொண்டும் வழக்கமாய் தெரு ஓர கட்டில் இளந்தாரிகள் மாபிள் விளையாடும் இடத்தில் மச்சானுடன்விளையாடிக் கொண்டும்தான் இருந்தார்கள் மச்சானை சுட்டுவிட்டு அவர்கள் இரண்டு பேரும் புஷ் பைக்கில்தான் இதே தெருவில் சென்று அடிச்சாண்ட வட்டை கட்டால் வேகமாக சென்று மறைந்தார்கள் ஊர் மக்கள் அவர்கள் சென்று சேரும் வரை அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள் 90.களின் மறாத பின் அந்ததி அது


90களின் பின் அந்தி -



ஒரு ஊசாட்டமும் இல்லை
என் செம் மண் தெருவை
தார் ஊற்றி கொன்றது யார்

90களின் பின் அந்தியா இது

அப்போது காகங்கள் என்றாலும்
தெருவை கலைத்துக் கொண்டிருக்கும்
ராணுவ வீரர்களின் சூ கால்கள்
தெருவின் விரை மீது
ஊன்றி ஊன்றி மிதிக்கும்

ஜீப் வண்டிகளின்
டயர் தடங்களில் நசுங்கிய
கைப் பாவைகளைக் கேட்டு
எந்தக் குழந்தை என்றாலும்
அழுது வடிந்து கொண்டிருக்கும்

முரட்டு துப்பாக்கிகளைக் கண்டு
தெரு நாய்கள் குரைத்து குரைத்து
அச்சம் எழுப்பி
தெருவெல்லாம் கதறி ஓடும்

90-91 களின் அதிகாலை வெண் பனிக்குள்
உடல் கொடுகி விழி நிமிர்ந்து
கைகள் கெஞ்ச ஒவ்வொரு மின் கம்பங்களுக்கும்
உரமாக விதைக்கப்பட்டவர்களி
குருதி சொட்டிய பரள் மண் துகள்கள்
எங்கள் உம்மாக்களின் கண்களுக்குள்ளும்
விழுந்து கரிக்கும்

ஒரு ஊசாட்டமும் இல்லை
கைகளும் கண்களும்
கறுப்பு துணியால் கட்டபபட்டு
சும்மா கிடந்தது தெரு
மார்பில் இரும்பு துப்பாக்கிகள்
அழுந்தியிருக்கவில்லை
'நீல' வானத்தில் பறவைகளின் சஞ்சாரம் அறவே இல்லை

பின் அந்தி 6.00 மணிக்கு
எங்கள் விளையாட்டு திடல்களில்
யுத்த விதை விழுந்து மண் பிளந்து
வேர் கொண்டு எழுந்த நாட்களில்
ஒன்றா இது

1999ல் பயத்தோடு விளையாடி கழித்த
முன் இரா ஒன்றில்
'ஜஃபர் மச்சான்' இனம் தெரியாத
இரண்டு பேரால் சுட்டு கொல்லப்பட்டார்

அவர் மெளத்தாகி கிடந்த
மஞ்சோண்ணா மர நிழல் மட்டும்தான்
அவர் மரணத்திற்கு சாட்சியாய்
இருந்தது

பின் அதையும் கதற கதற
சுட்டு கொன்றுவிட்டார்கள்

-ஜெம்சித் ஸமான்

புத்தன் இறந்துவிட்டான் -



புத்தன் இறந்துவிட்டான்
போதி மரத்தை தறித்து
சிறு சிறு போதி மரக் கொள்ளிகளால்
புத்தனின் உடலை மூடி
எரித்துவிட்டார்கள்

போதி மரம் நின்ற இடத்தில்
துவேச நீரூற்றி
வேறு ஏதோ ஒரு பெயர் தெரியாத
மரத்தை வளர்க்கிறார்கள்

அது நிச்சயமாய்
போதி மரம் அல்ல

Wednesday, August 7, 2013

இஸலாம் எண்டா இப்ப இடி சம்பல் போல-

இஸலாம் எண்டா இப்ப இடி சம்பல் போல-

இலங்கையில் மொத்தம் ஏழு முப்திகள் அல்ல குஞ்சும் குராலுமா ஒரு கும்ப முப்திகள் அளவுக்கு மிஞ்சினா இப்படிதான் வாப்பாட செல்ல கேக்காத தகப்பஞ் சாமிகள் கூடிவிடும் தன் மூப்புக்கு நடக்கும் ஒரு காக்காவும் இஸ்லாத்த அவங்களுக்கு ஏத்தாப்பல மாத்திட்டாங்க போல என்ட ஸல்லல்லாவே இஸ்லாத்துக்கு இப்ப எத்தினையோ உம்மாவும் வாப்பாவும் பல சேனட வாய்க்குள்ள இவனுகளே அவல் போட்டுடானுகள் போல நாமே அவண்ட மண்ட கொதிய கிளப்புற மறுகா அவன்ட மண்ட கொதிக்கு மருந்து தேடுறா இந்த மச்சான் மாரு என்ன மச்சி ஞாபகத்திலயா இருக்காங்க சமூகம் எண்டா என்ன சம்பல் போடுற சாமானா ஆளாளுக்கு கொச்சிக்கா வெங்காயத்தையெல்லாம் கொண்டுவாறீங்க இஸ்லாம் எண்டா இப்ப இடி சம்பல் போல

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே நம் கரங்கள் வலுவிழந்துவிட்டதா..? தொழுகைக்கு இடம் இல்லை என்று கால் மிதியை உதறிப் போட்டுக் கொண்டு அதில் மனங் கோணாமல் ஏழை பணக்காரன் எல்லோரும் ஒரே சஹ்பில் நின்று தொழுது கொண்டு சந்தோஷமாய் வீடு திருமபிய காலங்கள் ஒழிந்து இப்போது ஆளுக்கு ஒரு இஸ்லாம் என்றாகிவிட்டது இப்போது இஸ்லாத்தில் எல்லோரும் முப்திகள் சுப்ஹானல்லாஹ் இப்போது ஆளுக்கொரு பெரு நான் நம்முடைய இந்த பிளவில் சந்தோஷப்படப் போவது யார் என்று நமக்கே தெரியும் நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இதுதான் நண்பர்களே நம் வலுவிழந்த கைகளை இறுகப் பற்றிக் கொள்வோம் இன்ஷா அல்லாம் குளிர் காய நனைக்கும் ஈனப் பிறவிகளுக்கு நாமே போர்வை கொடுப்பதா நாம் ஒற்றுமையை காட்ட வேண்டிய தருணத்தில் இப்படி ஒரு பிளவா பிரித் ஓதும் சாத்தான்கள் இனி சும்மா இருப்பார்களா வாப்பாக்கு பிள்ளை பெயர் வைக்கும் காலம் வந்தால் இப்படித்தான் வேறு மதத்து காக்காவெல்லாம் கூடி நின்று சிரிப்பானுங்க

-ஜெம்சித் ஸமான்

அவரின் மீசான் கட்டைகளை மண் மூடியிருக்கும்-


எனக்கு மூன்று வயதாக இருக்கும் போது
என் சகோதரன்
ஊர் காவல் படையில் சேர்ந்தார்

எனக்கு முதலில் சிவப்பு பேனாவும்
எழுத்து கொப்பியும் வாங்கித் தந்தது
அவர்தான்

பேனா பிடித்து அ,ஆ எழுதி காட்டியதும்
அவர்தான்
கடைசியாக அவர் முத்தமிட்டது
என்னைத்தான்

மீலாத்துன் நபி விழாக்கு
அடுத்த நாள்
சேனைக் குடியிருப்பு
உள் வீதி ஒன்றில்
உள்ளாடையோடு சுடப்பட்டு கிடந்தார்

அவருடைய மீசான் கட்டைகளை
மண் மூடியிருக்கும்
அடையாளம் காண முடியாமல்
பற்றைகள் வளர்ந்திருக்கும்
1995 அவர் இறந்த நாளிலிருந்து
அவருடைய தாய் அழுத கண்ணீரில்
அழியாமல் இருக்கிறது அவருடைய ஞாபகம்
எங்கள் வளவு மண் நிரம்ப
சிவப்பு பேனைகளை
பார்க்கும் போதெல்லாம்
விம்மி வரும் அழுகையை
அடக்கி கொள்கிறேன்

-ஜெம்சித் ஸமான்

தற்கொலை செய்த காற்று


இன்று
காற்றை என்னால்
சிறைப்படுத்த முடிந்தது
அதன் கைகளையும்
கால்களையும் கட்டி
அறையில் அடைத்து வைக்க முடிந்தது
காற்றோடு சிறிது நேரம் பேசிவிட்டு
தேநீர் கொடுத்து அனுப்பினேன்
தெருவில் நடந்து சென்ற காற்று
உடனே என் அறைக்கு திரும்பி வந்தது
உயிரினங்கள் எல்லாம் மரித்து விட்ட
உலகில்
தனிமையில் எப்படி வாழ்வது என்றது
நான் பதில் சொல்லும் முன்பே
காற்று தற்கொலை செய்து கொண்டது
நான் எப்போதும் போல
சுவர்களோடு இரவு உணவு அருந்தினேன்
கண்ணாடிகளோடு பேசினேன்
மின் விளக்கோடு சிரித்தேன்
காற்றும் அறியாத ஒரு வாழ்வை
நான் வாழப் பழகியிருந்தேன்

-ஜெம்சித் ஸமா

என் அறையில் தனியாக இருந்தேன்

என் அறையில் தனியாக இருந்தேன்
நான்கு சுவர்களில் ஏதோ ஒன்றிற்கு
திடீரென வாய் முளைத்தது
கை முளைத்தது
கால் முளைத்தது
பேச யாரும் இன்றி நான் கசக்கி எறிந்த
கடதாசிகளை ஒவ்வொன்றாய் வாசித்தது
பின் நீண்ட மழைக் காலம் ஒன்றை
விழிகளில் சுமந்து கொண்டு
அறைச் சுவர் வெளியேற
தொடங்கியிருந்தது
நிலா தற்கொலை செய்து கொள்ளும்
அந்த நதிகளுக்கு

-ஜெம்சித் ஸமான்

அது எவ்வளவு அழகாக இருந்தது



ஒரு தேநீர் கோப்பையை போல
கொஞ்சம் கசப்பாயும்
கொஞ்சம் இனிப்பாயும்
அது எவ்வளவு அழகாக இருந்தது
ஒரு புத்தகம் என்றோ
ஒரு வண்ணத்து பூச்சி என்றோ
ஒரு கொடுகிய புறாக் குஞ்சாகவோ
அதை நீங்கள் நினைத்திருக்கலாம்
நீங்கள் நினைப்பதுபோல
அது எதுவாகவும் இருக்கவிலை
அது அதுவாக இருந்தது
ஒரு அவமானத்தின் போது ா ய் பொத்தி அழவும்
காதல் தோல்வியை மறப்பதற்கும்
கூதல் கண்ணாடியின் முன்பு
முகம் பார்த்து பேசிக்கொள்ளவும்
அது எனக்கு தேவையாக இருந்தது

பொம்மைகளோடு விளையாடிய காலம் முதல்
அது என்னுடன்தான் இருந்தது

இப்போது அது இருக்கக் கூடும்
கடலின் அந்தப் பக்கம்
தேம்ஸ் கரையின் அமைதியில்
பழத்தோட்ட மர நிழல் ஒன்றில்
ஏன் வான் வெளியில் தாழப் பறக்கும்
பறவைகளின் வெளிகளிலும்..

யன்னல் திறக்கிறேன்
சிறு தோட்டம்
இலைகளை தூக்கி அலைகிறது காற்று
வலசை பறவைகள் சில
மாலை செவ்வானில் பறந்து திரிகின்றன

விருந்தாளிகளின் வருகைக்காய்
எப்போதோ போடப்பட்ட நாற்காலிகளிலும்
வெள்ளை மேசைகளிலும்
கருகி கிடக்கிறது
சில மஞ்சள் பூக்கள்...


-ஸமான்

அது எவ்வளவு அழகாக இருந்தது

வன் புணர்வு



வன் புணர்வின் பின்
பாசிக் குளத்தில் நிர்வாணமாக கிடக்கிறது
அவளுடைய செத்த உடல்
அடி வயிறு பொத்தி கதறி அழும் தாயின்
புழுதி மணல் ஒட்டிய கால்களுக்கு கீழ்
காளான்கள் நசுங்கி மனிதம் நாறின

கதறி அழும் தாயின் ஈர விழி முன்
பொம்மைகளோடு குதித்து விளையாடினாள்
பத்து வயது சிறுமி

பறக்க வேண்டிய சிறகுகள்
உளுத்து மண் கெளவின

அவளுடைய வெள் உடுப்புகள்
வறள் நில முள் பற்றை மீது கன்னி ரத்தம் ஊறிகிடந்தது

மலை கல்லில் விழுந்து
சிதறின பிள்ளை முகம்
நீர் தாவர அடைசலில் ெ ள்ளை சப்பாத்துகள் மிதந்த

முளை கருகி கிடந்தது வம்மி பிஞ்சு

சின்ன விரல்கள் செய்த
காகித படகுகள் கசக்கி எறியப்பட்டன

வண்ணத்து பூச்சின் இறகுகள்
பிய்க்கப்பட்டு உடலை கடியன்கள் அரித்தன

கண் குழிக்குள் ஈர குறி நீர்
நிரம்பி வழிந்தது
கரு அறையில் சினை கூடி
நரி நகங்களுக்கு பயந்து
ஜனிக்கமாட்டோம் என கத்தின
மீன் குஞ்சுகள்

மறுநாள்
மலையின் அடி வான் இருட்டில்

கதற கதற
கற்பழிக்கப்பட்டு கிடக்கிறது
பனி குளிரில் உடல் விறைத்த
சில நட்சத்திரப் பிஞ்சுகள்..


-ஸமான்

அடி வான் இருட்டு


ஈரச் சுதை பச்சை மனம் ஓவியங்களில் காணா நேர்த்தி செப்பனிட்ட வார்த்தை நடக்கிறது எரி தணலில்

முடிவு எச்சம் வீங்கி பெருத்து மழை ஆகி எதிர்பார்ப்பு ஒன்று சரிந்து கிடக்கிறது

பரிமாறாமல் மிச்சம் வைத்த ஞாபகம் கூடி
வேதனை விம்மி கழிகிறது இரா

காவு கொள்ளா என் வனத்தை முற்றுகை இட்டு இருக்கிறது உன் அமைதி

தொட்டியில் அடைபட்ட மீன் குஞ்சு ஆனேன்

சுற்றி வளைத்த வேலிக்குள் மூச்சு முட்டி அடங்கினேன் உடல் முழுவதும் மெளனம் பூசிய அறை

உரத்து பேசும ஆள் உயர யன்னல்
பார்வை அப்பி வழியும் இரா
கம்பி ரேழிக்குள்ளால்
விரிந்து அடங்கும் மன வெளி

அறைந்து தாழிட்ட இரக்கங்களை
தேடி களைத்த தெரு
கடந்து போகுதலில் பாரம் உப்பி
இருப்பு கொள்ளா நிசி
காட்டு தீ பெருத்து எரிகிறது கூடு

அடி வான் இருட்டில் கவிகிறது உன் மெளனம்...

- ஸமான்

பூ குடித்து இறந்த வண்ணத்தி



துயின்று எழுந்த பின் இரா பொடு பொடுத்த மழை
சுவர் பூக் கல் வழி ஊடுருவும் குமிழ் வெளிச்சம் நிலவை தின்றது

இருட்டு கெளவிய அறையில் என்னோடு அதுவாகி வசித்துவிட்ட
கைப் பாவைகள் இரங்கியது எனக்காக
உணர்வு இழந்த அதன் விழியில்
புத் உறை பிரித்த
ரத்த வாசம் பிசு பிசுத்தது முதல் குருதி துளி கசிந்து வடிந்து
சொட்டியது பூ மீது
பூ குடித்து இறந்தது வண்ணத்தி

கழுவி நீக்கப்படாத வியர்வை வாசம் கமழும்
உன் ஆடை தோயந்த அன்பு விறைக்கும் குளிர் நடுங்கி உடுத்திய புது ஆடைகளில் துளி கூட இல்லை

நீ நீயாக இல்லை
பொம்மைகள் இல்லாத நவீன அறையில்
என்னை கை பாவை ஆக்கினாய் நீ உருட்டி விளையாடி
உடைத்தாய் என்னை

தலை வேறு
கை வேறு
கால் வேறாக
அறை முழுவதும் நிறைந்து கிடந்தேன்

தாழ் இட்டு அடைத்த கதவின் பின்
நான் உரத்து அழும் தொனி
உன் செவிப்பறைகளை உசுப்பவில்லை

வெறுத்து மூடிய கதவுகளை திறக்க நினைப்பது
என் தவறுதான்

அறுகம் புல் தின்ற பூனை ஆகி கக்கி வைக்கிறாய் இரண தட்டு நிரம்ப
வெறுப்பு வார்த்தைகளை

பசி கூடி இறக்கிறேன் நிமிஷங்கள் விஷமாகி
நெஞ்சுக் குழி அடைத்த நஞ்சு ஆகிறது

கொடி விரித்த துணியின்
இறுதி ஈர சொட்டுகளாய் உலரவே காத்திருக்கிறது கடைசி இரங்கல்களும் இப்போதும் கேட்கிறது மலைகளின் அந்தப் பக்கம் கைவிடப்பட்டு சென்ற
ஆழ் மன குழந்தையின்
ஓயாத பீறிடல்


- ஸமான்

இரை கொத்தி இறக்கும் மீன் குஞ்சு




உள் அறையில் தாழிடப்பட்ட இரக்கம்
சாவி துளை வழி தேடுகிறது
பிரிவின் வேதனைக்குள் உருக்கி ஊற்றப்பட்ட உன்னை

குருவீச்சம் பூ நிறைந்த
மன வெளிக்குள்
அத்து மீறி நுழைகிறது
உன் காற்று
இறுதி வசந்தங்களையும் உதிர்த்திவிட

அடையாளம் அறியா உன் பசியில்
நான் அணு அணுவாக அருந்தப்பட்டேன்
காலியான மாம்ச குவனளையில் நிரம்ி வழிகிறது
உன் கோபத்தின் உச்சம்

பறந்து திரிய ஆசைதான்
உன் மன வெளியில் ஊர் குருவி என
கன்னி குத்தி வைத்திருக்கிறாய்
இரை தேட இறங்குவேன் என்று உன் பாழ் நிலங்களில்

காதலாகி கசிந்து உருகி
உன் விரல்களுக்குள் அகப்பட்ட
கைப் பாவை ஆனேன்
உருட்டி விளையாடு
உடைத்து விடாதே

இரை கொத்தி இறக்கும் மீன் குஞ்சாய்
இறக்க வேண்டியே
வருகிறேன் உன் வழியில்..


-ஸமான்

நிராகரிப்பு


துயர் கவிந்த வளை பாதை
சறுக்கி வீழ்ந்து
மடிந்தேன்
உன் நிராகரிப்பில்

அடம்பன் கொடி திரண்ட ஞாபக கூந்தல் நீண்டு
மரண வாசம் ஒன்றை
அறை முுக்க நிறைத்து வைத்திருக்கிறது
ஒப்புக்கு எனினும் ஒன்றையும் மீதம்
வைக்காமல்
நிவர்த்தி செய்கிறாய் உன்னுடைய எல்லா தேவைகளையும்

களைந்து பின் உடுத்திக்கொள்ளும்
ஆடை ஒன்றின்
வியர்வை வாசம் கமர்ந்தெழுகிறது
நீ மீதம் வைத்த
இறுதி அணைப்பில்

மரணத்தின் முதல் சொட்டு கரு அறையில் கூடி கசிந்தது
குருதி மணக்கும்
பச்சை உடலோடு
அழுதபடி ஜனித்தோம்
உலகம் வேண்டாம் என்ற
அழு குரல் அது

ஆழி மதக்கும் சருகில்
எழுதிய சொற்கள்
என இறுகிய அணைப்பிலிருந்து
பிரிந்து நிற்கிறாய் நடு காட்டில்

மரணம் நிரப்பிய
மாம்ச கோப்பைகளில் நிறைகிறது நீ நிராகரித்த அச் சிறு கணம்


- ஸமான்

ஒடுக்கப்பட்ட வெளி


ஏக்கம் கவிந்த விழி
அதட்டிய நாயை விழுங்கிய இரா
ஒடுக்கப்பட்டிருக்கிறேன் குறுகிய வெளிக்குள்..

விழி நீர் வெம்மிய காற்று வெளியில்
சுவாசிக்கும்
கைப்பாவையாய் நிறைகிறேன்

எந்த வித ஜீவிதமும் அற்ற
உரையாடலின் பின்
நிராகரிக்க தொடங்கினாய் உனது இறுதி இரக்கத்தயும்..

ரேழி பதித்த யன்னல் பற்றி விரிகிறது வாழ்க்கை
தாழிட்டு அடைத்த கதவின் பின்
மண்டியிட்டு அழுகிறது
ஆள் மன குழந்தை

முக நேர் சந்திப்பின் பின் இழை பிரித்து பரிமாறப்படுகிறது துயர்

உள் உழுத்த பசு மரத்தின் ஆணி வேரில் விடாமல் பெய்கிறது
என்னை காவு கொள்ளும் மழை

மறப்பது பற்றி பேசுகிறோம் வேரோடி வெடித்த நுண் துளைகளில்
கசிகிறது இனங் கொள்ளா இரக்கம்

அதட்டி பேசும் உன் உரத்த தொனியில்
இலை நொறுங்கி வீழ்ந்து தழும்பியது
வேர் கொள்ளா ஆறு
காவு வாங்கா நதி
ஊர் குடித்தது..!!

- ஸமான்

மனிதர்கள் வாழ்கிறார்கள்


இருள் கவிந்த தெரு
கோடை மழை அதட்டிய வெய்யில்

தென்னங் கீற்றின்
நடு ஈர்க்கு என
திடகாத்திரமாய் நிற்கிறது துயர்

நிலம் தின்ற மழை இது
பிணங்களை புணர்ந்தே இறந்த
காற்று இது

பழைய உணர்வெழும்பி
விம்மி அடங்கிற்று ஏக்கம்

நான் தின்ற இராக் கால ஞாபகங்கள்
பதுங்கு குழிக்குள் முளைக்கிறது
பழுப்பு காவி திரண்ட காளான்களென

மரணம் மலிந்த பூமியில் மனிதனாய் நடமாட ஐயுறுகிறேன்

வெறிச்சோடிய அறைகளில் மலைகளை சுமந்த மனிதர்கள்
இப்போதும் வாழ்கிறார்கள் திராணி அற்று கருவில் காந்தழ் பூக்கும்
வேதனை பெரு வெளி இவர்களுடையது

பிணம் அடுக்கிய நடை பாதைகளில்
நிம்மதி இழந்த மனிதர்கள் நாங்கள் பொம்மைகள் இல்லா உலகில் சில காலம் பொம்மைகளென அவர்களுக்கு நாங்கள் ஆனோம்

கை வேறு
கால வேறு
தலை வேறு
என
களற்றி எறிந்தார்கள் எங்களை

சுவாசிக்கும் எல்லாமே மனிதர்கள் என்றால் நாங்களும் மனிதர்கள்தான்...

-ஸமான்
ஒரு விளையாட்டு பொருளாய்
உன் விரல் சேர்ந்திருக்கிறது
என் காதல்
உருட்டி விளையாடு
உடைத்து விடாதே...