Wednesday, August 7, 2013

அடி வான் இருட்டு


ஈரச் சுதை பச்சை மனம் ஓவியங்களில் காணா நேர்த்தி செப்பனிட்ட வார்த்தை நடக்கிறது எரி தணலில்

முடிவு எச்சம் வீங்கி பெருத்து மழை ஆகி எதிர்பார்ப்பு ஒன்று சரிந்து கிடக்கிறது

பரிமாறாமல் மிச்சம் வைத்த ஞாபகம் கூடி
வேதனை விம்மி கழிகிறது இரா

காவு கொள்ளா என் வனத்தை முற்றுகை இட்டு இருக்கிறது உன் அமைதி

தொட்டியில் அடைபட்ட மீன் குஞ்சு ஆனேன்

சுற்றி வளைத்த வேலிக்குள் மூச்சு முட்டி அடங்கினேன் உடல் முழுவதும் மெளனம் பூசிய அறை

உரத்து பேசும ஆள் உயர யன்னல்
பார்வை அப்பி வழியும் இரா
கம்பி ரேழிக்குள்ளால்
விரிந்து அடங்கும் மன வெளி

அறைந்து தாழிட்ட இரக்கங்களை
தேடி களைத்த தெரு
கடந்து போகுதலில் பாரம் உப்பி
இருப்பு கொள்ளா நிசி
காட்டு தீ பெருத்து எரிகிறது கூடு

அடி வான் இருட்டில் கவிகிறது உன் மெளனம்...

- ஸமான்

No comments:

Post a Comment