Wednesday, August 7, 2013

ஒடுக்கப்பட்ட வெளி


ஏக்கம் கவிந்த விழி
அதட்டிய நாயை விழுங்கிய இரா
ஒடுக்கப்பட்டிருக்கிறேன் குறுகிய வெளிக்குள்..

விழி நீர் வெம்மிய காற்று வெளியில்
சுவாசிக்கும்
கைப்பாவையாய் நிறைகிறேன்

எந்த வித ஜீவிதமும் அற்ற
உரையாடலின் பின்
நிராகரிக்க தொடங்கினாய் உனது இறுதி இரக்கத்தயும்..

ரேழி பதித்த யன்னல் பற்றி விரிகிறது வாழ்க்கை
தாழிட்டு அடைத்த கதவின் பின்
மண்டியிட்டு அழுகிறது
ஆள் மன குழந்தை

முக நேர் சந்திப்பின் பின் இழை பிரித்து பரிமாறப்படுகிறது துயர்

உள் உழுத்த பசு மரத்தின் ஆணி வேரில் விடாமல் பெய்கிறது
என்னை காவு கொள்ளும் மழை

மறப்பது பற்றி பேசுகிறோம் வேரோடி வெடித்த நுண் துளைகளில்
கசிகிறது இனங் கொள்ளா இரக்கம்

அதட்டி பேசும் உன் உரத்த தொனியில்
இலை நொறுங்கி வீழ்ந்து தழும்பியது
வேர் கொள்ளா ஆறு
காவு வாங்கா நதி
ஊர் குடித்தது..!!

- ஸமான்

No comments:

Post a Comment