Wednesday, August 7, 2013

மனிதர்கள் வாழ்கிறார்கள்


இருள் கவிந்த தெரு
கோடை மழை அதட்டிய வெய்யில்

தென்னங் கீற்றின்
நடு ஈர்க்கு என
திடகாத்திரமாய் நிற்கிறது துயர்

நிலம் தின்ற மழை இது
பிணங்களை புணர்ந்தே இறந்த
காற்று இது

பழைய உணர்வெழும்பி
விம்மி அடங்கிற்று ஏக்கம்

நான் தின்ற இராக் கால ஞாபகங்கள்
பதுங்கு குழிக்குள் முளைக்கிறது
பழுப்பு காவி திரண்ட காளான்களென

மரணம் மலிந்த பூமியில் மனிதனாய் நடமாட ஐயுறுகிறேன்

வெறிச்சோடிய அறைகளில் மலைகளை சுமந்த மனிதர்கள்
இப்போதும் வாழ்கிறார்கள் திராணி அற்று கருவில் காந்தழ் பூக்கும்
வேதனை பெரு வெளி இவர்களுடையது

பிணம் அடுக்கிய நடை பாதைகளில்
நிம்மதி இழந்த மனிதர்கள் நாங்கள் பொம்மைகள் இல்லா உலகில் சில காலம் பொம்மைகளென அவர்களுக்கு நாங்கள் ஆனோம்

கை வேறு
கால வேறு
தலை வேறு
என
களற்றி எறிந்தார்கள் எங்களை

சுவாசிக்கும் எல்லாமே மனிதர்கள் என்றால் நாங்களும் மனிதர்கள்தான்...

-ஸமான்

No comments:

Post a Comment