Thursday, August 22, 2013

-ஞாபகப் பல்லிகள்



சுவரில் ஊர்ந்து சென்ற ஞாபகப் பல்லியின் . கால் தடங்களை தேடி ஒரு . ஒரு ஆறாத் தவிப்போடு . சுவர் வழியே ஏறத் தொடங்கினேன் . சறுக்கி சறுக்கி மூட்டை மூட்டையாய் . பெருஞ் சுமைகள் . நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன் . ஏழு கடல்களை குடித்து . ஓராயிரம் மலைகளையும் விழுங்கி . பேரலையை விடப் பெரிதாய் . அந்த ஞாபகப் பல்லிகள் . என்னை நோக்கி வரும் போது . அலைகளும் முற்றுகை இட முடியாத . ஒழிந்து கொள்ளலாமென்று . ஓடி வரும் போது . குதித்துப் பாய்ந்த பல்லி . என் மனச் சுவரில் ஒட்டிக் கொண்டது . அந்த ஞாபகத்தை பிடித்து . கொன்று விடலாம் என்று . என் மனச் சுவரில் ஏறத் தொடங்கினேன் . எனக்குள்ளிருந்த குப்பைகளுக்குள்ளும் . கூளங்களுக்குள்ளும் . அது ஒட்டி ஒட்டி ஊர்ந்து . அரவமே இல்லாமல் ஒழிந்து கொண்டது . என் இதயத்தை . குப்பைகளாகவும் கூளங்களாகவும் . மலைக் கற்களாகவும் . அழகாக துப்பரவு செய்து விட்டு . சூரியனை சக்கையாயாய் பிழிந்து . வெளிச்சத்தை தளும்பி வழியும் மட்டும் . இதயக் குவளையில் ஊற்றுகிறேன்.அங்குதான் புன்னகை என்னும் . பெரும் பாம்புகள் துயரப் பல்லியை . விழுங்கிக் கொண்டிருந்தது . பல்லியை விழுங்கி முடித்த கையோடு . பாம்பு என் உதடுகளில் சுருண்டு கொண்டது . எனக்குள்ளிருந்து புன்னகையை . கைப் பற்றிக் கொண்டு வெளியே வருகிறேன் . எனக்காக கண்ணீரை உற்பத்தி செய்து கொண்டிருந்தவர்கள் . இன்னுமொரு என்னை . தேடிக் கொண்டிருந்தார்கள் . ஒரு புன்னகையை எப்படியெல்லாம் . காப்பாத்த வேண்டி இருக்கிறது

-ஜெம்சித் ஸமான்

No comments:

Post a Comment