Wednesday, August 7, 2013

நிராகரிப்பு


துயர் கவிந்த வளை பாதை
சறுக்கி வீழ்ந்து
மடிந்தேன்
உன் நிராகரிப்பில்

அடம்பன் கொடி திரண்ட ஞாபக கூந்தல் நீண்டு
மரண வாசம் ஒன்றை
அறை முுக்க நிறைத்து வைத்திருக்கிறது
ஒப்புக்கு எனினும் ஒன்றையும் மீதம்
வைக்காமல்
நிவர்த்தி செய்கிறாய் உன்னுடைய எல்லா தேவைகளையும்

களைந்து பின் உடுத்திக்கொள்ளும்
ஆடை ஒன்றின்
வியர்வை வாசம் கமர்ந்தெழுகிறது
நீ மீதம் வைத்த
இறுதி அணைப்பில்

மரணத்தின் முதல் சொட்டு கரு அறையில் கூடி கசிந்தது
குருதி மணக்கும்
பச்சை உடலோடு
அழுதபடி ஜனித்தோம்
உலகம் வேண்டாம் என்ற
அழு குரல் அது

ஆழி மதக்கும் சருகில்
எழுதிய சொற்கள்
என இறுகிய அணைப்பிலிருந்து
பிரிந்து நிற்கிறாய் நடு காட்டில்

மரணம் நிரப்பிய
மாம்ச கோப்பைகளில் நிறைகிறது நீ நிராகரித்த அச் சிறு கணம்


- ஸமான்

No comments:

Post a Comment