Monday, August 26, 2013

பூமி கடலானது ..............................


பூக்களின் இதழ் மீது
காதல் வற்றிய விழி குளத்திலிருந்து
தவிப்பு மிகுந்த விரல்களால்
அள்ளிக் கொண்டு வந்த
ஒரு சுறங்கைக் கண்ணீர்
விழுந்து கிடந்தது
காற்று துடைப்பத்தோடு பூக்களை
பெருக்க வந்த போது
கண்ணீர் சிதறி பூமியில் விழுந்து
பூமி கடலானது
பிரிவை சுமந்த
சிறு சிறு மீன்கள் மாத்திரம்
முட்கள் குத்தி காம்பு பெயர்ந்து
கடலில் விழுந்து துடித்தது பூவாக
பூ விழுந்த போது
சுவர்கள் அதிர்ந்தன
வெடிப்பெடுத்த சுவரின்
நுண் துளைக்குள்ளிருந்து
பறந்து செல்கிறது
சிறு சிறு மயிர் துளைக்குள்ளால் கசியும்
இரக்கமென்ற வண்ணத்திகள்
-ஜெம்சித் ஸமான்

No comments:

Post a Comment